வடிவேலுவின் தாயார் உடலுக்கு அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று அஞ்சலி.!
நடிகர் வடிவேலுவின் தாயார் உடலுக்கு அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது.
சரோஜினி அவர்களின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்துவிட்டு, வடிவேலுவுக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரங்கலை தெரிவித்திருந்தார்.
அவரை தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் நேரில் சென்று மரியாதையை செய்துவிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய ஆறுதலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.