இந்தோனேசிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் மோடி ..!
பிரதமர் மோடி இன்று, இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார்.
5நாள் பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, இந்தோனேசிய அதிபர் ஜேகோ விடோடோவுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், மாணவர்கள், இந்திய வம்சாவளியினரை மோடி சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்.
இதனிடையே பிரதமர் மோடி இன்று அர்ஜூன விசாயா என்ற புகழ்மிக்க நினைவுச் சின்னத்தை பார்வையிடுகிறார். மகாபாரத யுத்தத்தில் பகவான் கண்ணன் தேரோட்டியாக ரதத்தில் அர்ஜூனனை குருசேத்திர களத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சியை இது சித்தரிக்கிறது. அர்ஜூனனின் 8 குதிரைகளின் ரதம் நிலம், சூரியன், அக்னி, நட்த்திரம், கடல், காற்று, மழை, காலம் ஆகியனவற்றை குறிக்கிறது.