போராட்டம் நடத்தும் வீரர்களால் ஒலிம்பிக் பதக்கம் வெல்லமுடியாது- WFI தலைவர்
போராட்டம் நடத்தும் வீரர்களால் ஒலிம்பிக் பதக்கம் வெல்லமுடியாது என இந்திய மல்யுத்த பெடரேஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருவது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங், தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளால் தான் மிகவும் காயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர் வினேஷ் போகட், கூறும்போது, WFI தலைவர் சரண் சிங், பல பெண்களை பாலியல் துன்புறுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கங்களை கொண்டு வர முடியாத கோபத்தில், இந்த மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்துகின்றனர். மேலும் மல்யுத்தத்தில் சிறந்து விளையாடுவதற்கான வயது 22 முதல் 28 ஆண்டுகள் ஆகும். போராட்டம் நடத்தும் இவர்களால் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாது என அவர் தெரிவித்தார்.