INDvsNZ ODI: நியூசிலாந்து அணி,97 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்தது.!

Default Image

இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 97/4 ரன்கள் குவிப்பு.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷுப்மன் கில்லின் அதிரடி இரட்டை சதத்துடன், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349  குவித்தது.

350 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டெவான் கான்வே 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஓரளவு நிலைத்து நின்று விளையாடினார். அவர் 40 ரன்களில் ஷார்துல் தாக்குரிடம் விக்கெட்டை இழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ்(18 ரன்கள்) மற்றும் டேரில் மிட்சேல்(9 ரன்கள்) குல்தீப் யாதவின் பந்தில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா சார்பில், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் ஷார்துல் தாக்குர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து அணி, வெற்றி பெற இன்னும் 30 ஓவர்களில் 253 ரன்கள் தேவைப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்