விமான எமர்ஜென்சி கதவு விவகாரம்.! தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார்.! அமைச்சர் சிந்தியா விளக்கம்.!

Default Image

தவறுதலாக அவசரகால கதவு திறக்கப்பட்டுள்ளது என தனது செயலுக்கு எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார். – மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சிந்தியா விளக்கம். 

கடந்த மாதம் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் பயணம் புறப்படும் போது அவசரவழி கதைவை திறந்த காரணத்தால் சில மணிநேரம் விமானம் புறப்பட தாமதமானது. இந்த விமானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பயணித்தனர். இந்த அவசரவழி கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.  பலர் இந்த நடடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விளக்கம் அளிக்க வேண்டும் என இண்டிகோ நிறுவனம் கூறியது.

அதனை தொடர்ந்து எம்பி தேஜஸ்வி சூர்யா, தான் தெரியாமல் எமர்ஜென்சி கதவை திறந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் விளக்கம் அளித்தார். என இண்டிகோ தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக  மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சிந்தியாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ தவறுதலாக அவசரகால கதவு திறக்கப்பட்டுள்ளது என தனது செயலுக்கு எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார்.’என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்