சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.!
சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கடந்த 6ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நிறைவு பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிறைவு விழாவில், தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே புத்தகங்களின் பதிப்புரிமை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.