22 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் நடால்! ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி.!
நடப்புச் சாம்பியனான ரஃபேல் நடால், ஆஸ்திரேலிய ஓபன் 2-வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
22 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ரஃபேல் நடால், ஆஸ்திரேலிய ஓபன் ராட் லேவர் அரங்கில், மெக்கன்சி மெக்டொனால்டிற்கு எதிராக நடந்த இரண்டாவது செட்டில், 6-4 மற்றும் 5-3 என்ற செட் கணக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக, பயிற்சியாளரின் அறிவுரைப்படி, மருத்துவ சோதனை மேற்கொண்டார்.
காயத்திற்கு பிறகு மீண்டும் வந்து விளையாடிய நடால், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டிடம் 6-4 6-4 7-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இதன்மூலம் நடாலின் மூன்றாவது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்திற்கான முயற்சியை மெக்டொனால்டு முடித்து வைத்திருக்கிறார்.
Always a pleasure, @RafaelNadal ????#AusOpen • #AO2023 pic.twitter.com/CdnOMzYDK0
— #AusOpen (@AustralianOpen) January 18, 2023