பாஜாகவில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மன்பிரீத் பாதல்..!
பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மன்பிரீத் பாதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாபின் முன்னாள் நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார். டெல்லியில் உள்ள தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பலர் முன்னிலையில் மன்பிரீத் கட்சியில் இணைந்துள்ளார்.
மன்பிரீத் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்வதாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் காங்கிரஸால் தான் ஏமாற்றமடைந்துள்ளதாக பாதல் கூறியிருந்தார்.
மேலும் கட்சியிலும் ஆட்சியிலும் நான் வகித்த ஒவ்வொரு பதவிக்கும் நான் எனது முழு ஆற்றலை அர்ப்பணித்தேன். இந்த வாய்ப்புகளை எனக்கு வழங்கியதற்கும் நீக்க அனைவரும் என் மீது வைத்துள்ள மரியாதைக்கும் நன்றி என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.