வண்டி ஓட்டியாச்சு..லைசன்ஸ் வாங்கியாச்சு..மாஸ் காட்டும் ‘துணிவு’ நாயகி.!

Default Image

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. படத்தில் நடித்த மஞ்சுவாரியர் நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், நடிகை மஞ்சுவாரியர் இருசக்கர வாகனம் ஓட்டி காட்டி லைசன்ஸ் வாங்கியுள்ளார். ஏர்கனக்குளம் எர்ணாக்குளம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் காட்டி  அவர் லைசன்ஸ் பெற்றுள்ள அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லைசன்ஸ் வாங்கியுள்ள மஞ்சுவாரியருக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் மஞ்சுவாரியர் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆயிஷா எனும் மலையாள திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்