பாஜக கூட்டணி.? நான் ஜோசியக்காரன் கிடையாது.! அமைச்சர் ஜெயக்குமார் பதில்.!
பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு நான் என்ன ஜோசியக்காரன் கிடையாது என்று கூறிவிட்டு நகர்ந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியுடன் தான் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை பாஜக தேர்தல்களை எதிர்கொண்டது. இந்த தேர்தலை தொடர்ந்து, கூட்டணி தொடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தொடருமா என்பது குறித்து கேட்கையில், ‘ நான் என்ன ஜோசியக்காரன் கிடையாது.’ என்று கூறி அந்த கேள்விக்கு பதில் கூறாமல் அங்கிருந்து ஜெயக்குமார் சென்றுவிட்டார்.