மத பாகுபாடு கஷ்டமா இருக்கு.. கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் அமலாபால் வேதனை.!
நடிகை அமலாபால் தற்போது சில புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சாமி தரிசனம் செய்வதற்காக இன்று எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த கோவிலில் இருந்த நிர்வாகிகள் அவரை உள்ளை அனுமதிக்கவில்லையாம்.
அமலா பாலை கோவிலுக்குள் அனுமதிக்காமல், சாலையில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் சற்று வேதனையடைந்த அமலாபால் கோவிலுக்கு வெளியே இருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் ” திருவைராணிக்குளம் மஹாதேவ கோயிலுக்குள் நுழைய, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த 2023- ஆம் ஆண்டில் கூட மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும்போது ரொம்பவே வேதனையாக இருக்கிறது. விரைவில் இதுபோன்ற மத பாகுபாடுகளில் மாற்றம் வரும் என அமலாபால் எழுதியுள்ளார். மேலும், கோவிலுக்குள் செல்ல அனுமதி அமலா பால் மறுக்கப்பட்ட இந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.