அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் துயரம்.! காளை முட்டியதில் சிறுவன், மூதாட்டி பலி.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி நடைபெற்ற எருதுகட்டு விழாவில் 11 வயது சிறுவன் காளை முட்டி உயிரிழந்தார்.
பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில ஜல்லிக்கட்டு, எருது விடும் , மஞ்சுவிரட்டு போட்டிகள் அனுமதியின்றியும் நடைபெற்று வருகின்றன.
அப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் மாதேப்பள்ளி எனும் கிராமத்தில் எருது விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண நாடுவனபள்ளி கிராமத்திலிருந்து பவன்குமார் என்ற 11 வயது சிறுவன் பார்க்க வந்துள்ளான்.
அப்போது, அங்கிருந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்று முட்டியதில் அந்த சிறுவன் பலத்த காயமடைந்தான். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அந்த சிறுவன் உயிரிழந்தான்.
அதே போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராமச்சந்திரம் கிராமத்தில் எருத்துகட்டு விழாவில் மூதாட்டி ராஜி என்பவர் ஜல்லிக்கட்டு காளை முட்டிபதில் உயிரிழந்துள்ளார்.