ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் நிகழ்ந்த விபத்து….ஒருவர் உயிரிழப்பு.!
ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் படப்பிடிப்பிற்கு மின்விளக்கு பொருத்தும் பணியின் போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் சத்தியராஜ் நடித்து வரும் ‘வெப்பன்’ படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராத விதமாக விபத்து நடந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பின் போது லைட் மென் குமார் என்பவர் 40 அடி உயரத்தில் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கால் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.