கல்லூரி மாணவி நடுரோட்டில் வெட்டி கொலை.! பெங்களூருவில் பயங்கரம்.!
பெங்களூருவில் கல்லூரி மாணவி நேற்று மாலை வீடு திரும்புகையில் 2 மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு நகரில் தனியார் கலை கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்த ராசி (வயது) எனும் கல்லூரி மாணவி நேற்று மாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, ஷண்போகனஹள்ளியில் வசித்து வந்த ராசி, நேற்று கல்லூரி முடிந்ததும், பேருந்தில் திப்பூர் பஸ் ஸ்டாப் வந்து, அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயம் 2 மர்ம நபர்கள் வந்து கல்லூரி மாணவியின் கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த மாணவி உயிரிழந்துவிட்டார். கொலை செய்த 2 மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.