அத்திக்கடவு – அவிநாசி திட்டம் பிப்ரவரியில் தொடக்கம்.! அமைச்சர் முத்துசாமி உறுதி.!
பிப்ரவரி 15க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
பவனி ஆற்றில் இருந்து வெளியேறும் வெள்ள உபரிநீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சி மிகுந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரப்புவதற்கு உதவும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் பற்றி அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், அத்திக்கடவு அவினாசி திட்டம் ஜனவரி இறுதிக்குள் பெரும்பாலும் அனைத்தும் முடிந்துவிடும். தற்போது கேபிள் பணிகள் அமைப்பது, கான்கிரீட் தேவைப்படும் இடங்களில் அமைப்பது போன்ற சிறு சிறு வேலைகளே நடைபெற்று வருகின்றன. எனவும்,
பிப்ரவரி ஆரம்பத்தில் 10 நாள் இதன் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன் பிறகு சிறு குறைகள் இருந்தால் அது களையப்பட்டு, பிறகு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.