1 வாரத்தில் ‘200’ கோடி வசூல் செய்த “வாரிசு”.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவில் ரூ. 210 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வசூல் ரீதியாக படம் வெளியான 5 நாட்களில் 150 கோடி வசூலை கடந்ததாக படத்தை தமிழகத்தில் வாங்கி வெளியிட்ட 7 ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படம் வெளியான 1 வாரத்தில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, வாரிசு திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளதாக 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ella edamum namma records dhan????#MegaBlockbusterVarisu crosses 210Crs+ collection worldwide in 7 days ????#VarisuHits210Crs#VarisuPongalWinner#Thalapathy @actorvijay Sir @directorvamshi@SVC_official@MusicThaman @iamRashmika @Lyricist_Vivek@Jagadishbliss@TSeries#Varisu pic.twitter.com/EGRwxBe7gh
— Seven Screen Studio (@7screenstudio) January 18, 2023