புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்துவிட்டன.
அடுத்ததாக இன்று, புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
இந்த புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்க உள்ளது. இதில் 300 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் பங்கேற்க உள்ளனர்.