பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி !

Default Image

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு :

இன்று  காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில்  மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதம் 97.3% ஆகும்.

1. ஈரோடு -97.3%

2.திருப்பூர் 96.4% பேர்

3.கோவை 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

இயற்பியல் – 93 %,

வேதியல் – 92.7%,

உயிரியல் – 92.6%,

தாவரவியல் – 89.3%,

விலங்கியல் -91.8%,

கணிதம் – 92.5%,

கணினி அறிவியல் – 95 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.2,054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

மதிப்பெண்கள் விவரம்:

500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் – 30,380 பேர்

451 – 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 64,817 பேர்

426 – 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 48,560 பேர்

401 – 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 61,369 பேர்

351 – 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 1,60,581 பேர்

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடியதேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

hmpv live
Erode By Eletion 2025
Delhi election date
HMP Virus - Mask compulsary in Tamilnadu
Rajinikanth
earthquake nepal
mk stalin net exam