சன்சாத் கேல் மகாகும்பத்தின், இரண்டாம் கட்டம் நாளை பிரதமர் தொடங்கிவைப்பு.!

Default Image

சன்சாத் கேல் மகாகும்பத்தின், இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான, சன்சாத் கேல் மஹாகும்பின் இரண்டாம் கட்டத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில், நடைபெறும் மகாகும்பத்தை, மதியம் 1 மணிக்கு காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சன்சாத் கேல் மஹாகும்பம் 2021 முதல் பஸ்தி மாவட்டத்தில், மக்களவை எம்பி ஹரிஷ் திவேதியால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. சன்சாத் கேல் மஹாகும்பம் 2022-23, இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 16, 2022 வரை நடைபெற்றது.

கேல் மஹாகும்பம், மல்யுத்தம், கபடி, கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, செஸ், கேரம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. இவை தவிர, கட்டுரை எழுதும் போட்டிகள், ஓவியம், ரங்கோலி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேல் மஹாகும்பம், என்பது இளைஞர்களுக்கு அவர்களின் விளையாட்டு திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பையும் தளத்தையும் வழங்கும் புதிய முயற்சியாகும். இளைஞர்களிடையே ஒழுக்கம், குழுப்பணி, ஆரோக்கியமான போட்டி, தன்னம்பிக்கை மற்றும் தேசிய உணர்வு ஆகியவற்றை வளர்க்கவும் இது முயற்சிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்