மெரினா கடற்கரையில் ஹெலிகாப்டர் மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை.!
சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சென்னை காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கமான கூட்டத்தை விட அதிகளவு கூட்டம் நிரம்பி வருவதால் காவல்துறையின் கட்டுப்பாடுகளும் அதிகரித்து உள்ளது.
அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் யாருக்கும்குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருவதால், காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் கண்காணித்தார்.