அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு..! காரை பரிசாக பெற்றவர் இவர் தான்..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் 10 சுற்றுகள் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 820 மாடுகள் களமிறங்கிய நிலையில், 304 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் நாட்டுமாடு பரிசாக வழங்கப்பட்டது. 20 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த அஜய்க்கு பைக் மற்றும் நாட்டு மாடு பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், அமைச்சர் உதயநிதி சார்பில், சிறப்பாக களம் ஆடிய புதுக்கோட்டை கைகுறிச்சி தமிழ் செல்வன் என்பவரது காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.