விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்..! விசாரணைக்கு உத்தரவிட்ட விமான போக்குவரத்து இயக்குனரகம்..!
விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகர்களுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் திருச்சியில் இண்டிகோ விமானத்தில் அவசரகால கதவு திறக்கப்பட்டதால், காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திறந்ததால், சுமார் 2.30 மணி நேரம் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த அவசரகால கதவை திறந்தது தேசிய கட்சி பிரமுகர் என செய்திகள் வெளியாகின.
இந்த சம்பவம் நடந்து ஒருமாத காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.