ரஷ்யா ஏவுகணை தாக்கப்பட்ட கட்டிடத்தின், 7 வது மாடியில் சிக்கி அதிர்ச்சியில் உறைந்த பெண்.!
ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்ட கட்டிடத்தின், 7 வது மாடியில் இடிபாடுகளில் சிக்கிய பெண் வியக்கத்தகு முறையில் மீட்கப்பட்டுள்ளார்.
உக்ரைனின் அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யாவின் ஏவுகணைகள் தாக்கப்பட்டதில், அக்குடியிருப்பின் 7-வது மாடியில் சிக்கிய பெண் ஒருவர், அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளார். ஏவுகணை தாக்கியதில், அனஸ்தேசியா என்ற பெண்ணின் பெற்றோர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அதிர்ச்சியில் உறைந்த பெண் தன் வாயில் கை வைத்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அனஸ்தேசியா ஸ்வெட்ஸ் என்ற அந்த பெண்ணின் கணவர், போரில் ஏற்கனவே உயிரிழந்துள்ளார், அவள் தன் பெற்றோருடன் சமையலறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென குளியலறைக்கு சென்றதால் அனஸ்தேசியா மட்டும் ஏவுகணை தாக்குதலில் உயிர் பிழைத்துள்ளார்.
கட்டிடத்தில் சுமார் 1,700 பேர் வசித்து வந்தனர், மேலும் தாக்குதலுக்குப் பிறகு, இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிவதில் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இடைவிடாது பணியாற்றி வந்தனர். இதுவரை 40 பேர் இறந்துள்ளனர் மற்றும் 39 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.