உ.பி நடைபாதை விவகாரம்.! பிரதமர் மோடி,முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம்.!
மதுரா கோவிலின் சுற்றுவட்ட பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ரத்தத்தால் கடிதம் எழுதி பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் மதுரா பகுதியில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலில் அதனை சுற்றியும் நடைபாதை அமைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக தற்போது அவர்கள், ரத்தால் கடிதம் எழுதியுள்ளனர். இந்த சுற்றுப்பாதை அமைவதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தங்கள் வீடுகளை இழக்க நேரிடும் எனவும் கூறி ரத்ததால் கடிதம் எழுதி அதனை பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.