105 அடி…பெரிய ஹாக்கி ஸ்டிக்..உலக சாதனை படைத்த மணல் சிற்பம்.!

Default Image

ஒடிசாவில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி ஹாக்கி உலகக்கோப்பை போட்டி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான பிரமாண்ட தொடக்க விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் , பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 5,000 ஹாக்கி பந்துகளை கொண்டு உருவாக்கிய மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி 2 நாட்கள் இரவு, பகலுமாக 5 டன் மணல் கொண்டு 105 அடி நீளம் கொண்ட 5000 ஹாக்கி பந்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5,000 ஹாக்கி பந்துகளை கொண்டு உருவாக்கிய மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பம் 16 அணிகளை குறிக்கும் வகையில் 16 வகையான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது உலக சாதனைகள் இந்திய அமைப்பால் புதிய உலக சாதனையை இந்த சிற்பம் படைத்துள்ளது. இதனையடுத்து, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கலைஞர் சுதர்சன் பட்நாயக்க்கு தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்