‘உலகின் மிக அழகான பெண்’ நடிகை கினா லோலோபிரிகிடா காலமானார்.!

Default Image

இத்தாலிய நடிகை கினா லோலோபிரிகிடா தனது 95வது வயதில் காலமானார்.

1950கள் மற்றும் 60களில் ஐரோப்பிய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை கினா லோலோபிரிகிடா. இவர் பீட் தி டெவில், தி ஹன்ச்பேக் ஆஃப் நோட்ரே டேம் மற்றும் கிராஸ்டு வாள்ஸ் ஆகிய மெகா ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து கினா லோலோபிரிகிடா வை ரசிகர்கள்  பலரும் ஒரு காலகட்டத்தில்  ‘உலகின் மிக அழகான பெண்’ என்று அடிக்கடி அழைத்தனர். இந்நிலையில், 95 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.  இவரது திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்