வேங்கைவயல் கிராமத்தில் சமத்துவ பொங்கல் – அமைச்சர்கள் பங்கேற்பு..!
இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
மூன்று சமூக மக்களிடம் இருந்தும் அரிசி, வெல்லம் உள்ளிட்டவற்றை பெற்று அதிகாரிகள் முன்னிலையில் பொங்கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி, மெய்ய நாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.