60 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்தது சீன மக்கள் தொகை..!
60 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சீனாவின் மக்கள் தொகை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் முதலில் இருப்பது சீனா. இருப்பினும் இதுவரை இருந்த மக்கள் தொகை சீனாவில் சென்ற ஆண்டில் இல்லை. 1961-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மாவோ சேதுங்கின் பேரழிவு காரணமாக மோசமான பஞ்சத்தில் இருந்தது. இதனால் இறப்புகள் அதிகமாகி மக்கள் தொகை குறைந்தது.
60 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் விவரங்களின் படி 2022 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள்தொகை சுமார் 1.4 மில்லியன் (141 கோடி) ஆக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து மக்கள் தொகை 0.8 மில்லியன் (850,000) குறைந்துள்ளது. 2022இல் பிறப்புகளை விட இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் .
2022 இல் பிறப்புகளின் எண்ணிக்கை 9.56 மில்லியனாகவும் இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியனாகவும் பதிவாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் புதிய பிறப்புகள் 13% குறைந்துள்ளதாகவும், 2020 இல் 22% குறைந்துள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.