காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் – பாஜகவினருக்கு பிரதமர் அறிவுறுத்தல்…!
நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி பிரதமர் மோடி அறிவுறுத்தல்.
டெல்லியில் நேற்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர் காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், நிகழ்ச்சிகள் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகத்தை மாநிலங்கள் பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.