பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – முதல் பரிசை தட்டி சென்றவர் இவர் தான்..!
மதுரையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
மதுரையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி அளவில் தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 860 காலைகள் களம் இறக்கப்பட்டது.
இதில் 23 காளைகளை பிடித்து தமிழரசன் என்பவர் முதலிடம் பெற்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி மணி இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகளை அடக்கி ராஜா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.