ஒரே நாடு.. ஒரே தேர்தல் – ஓபிஎஸ் ஆதரவு
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஈபிஎஸ்-ஐ தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு.
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முறைப்படி மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மத்திய நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்த இந்திய சட்ட ஆணையம் இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்டது.
இந்த பதிலை பிரதான கட்சிகள் ஜனவரி 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவில் பழனிசாமி தரப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் அவர்களும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் ஜெயலலிதா ஆதரித்த திட்டம். இதனை அதிமுக என்றைக்கும் ஆதரிக்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.