வரிப்போட்டே மிடில் க்ளாஸ் மக்களை தினமும் கொல்கிற பெருமை உங்கள் மோடி அரசையே சாரும் – ஜோதிமணி எம்.பி
வரிப்போட்டே மிடில் க்ளாஸ் மக்களை தினமும் கொல்கிற பெருமை உங்கள் மோடி அரசையே சாரும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நான் மிடில் கிளாஸை சேர்ந்தவர் என்பதால் மிடில் கிளாஸ் மக்களை என்னால் புரிந்துகொள்ள முடியும். மோடி அரசு மிடில் கிளாஸ் மக்கள் மீது எந்த வரியையும் விதிக்கவில்லை. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதால் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மிடில் க்ளாஸ் மேடம் நிர்மலா சீதாரான், பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு,அரிசி,பருப்பு எண்ணெய் ,பால் ,பெண்சில் மருத்துவமனை இவற்றையெல்லாம் நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்துவதில்லையா ? வரிப்போட்டே மிடில் க்ளாஸ் மக்களை தினமும் கொல்கிற பெருமை உங்கள் மோடி அரசையே சாரும் என பதிவிட்டுள்ளார்.