பிரபல சமுக ஊடகமான ஷேர்சாட் 20% பேரை பணிநீக்கம் செய்கிறது
இந்தியாவின் பிரபல சமுக ஊடகமான ஷேர்சாட் கடந்த ஒரு மாதத்தில் 100 பணியாளர்களை நீக்கிய பின்னர் மீண்டும் தந்து பணியாளர்களில் 20% பேரை நீக்க முடிவு செய்துள்ளது.இதன் மூலம் 400- 500 பேருக்கு வேலையிழப்பு ஏற்படும்.
இது பற்றி தலைமை நிர்வாக அதிகாரி அங்குஷ் சச்தேவா கூறுகையில்,தற்போதைய நிச்சயமற்ற மேக்ரோ பொருளாதார சூழலில் எங்கள் நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் உறுதி செய்வதில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.