நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம்..! இறுதி தருணத்தில் இந்திய பயணி வெளியிட்ட வீடியோ…!

Default Image

நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், இந்திய பயணி இறுதி தருணத்தில் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர்.

72 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க சில நிமிடங்களில் இருந்த நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் அங்கு பெரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மீட்பு குழுவினரால் மீட்பு பணி  மேற்கொள்ள இயலாத சூழலில், கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் 68 உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் 15 வெளிநாட்டவர்கள் பயணம் செய்த நிலையில், ஐந்து பேர் இந்திய பயணிகளும், ரஷ்யாவை சேர்ந்த நான்கு பயணிகளும், தென்கொரியாவில் சேர்ந்த இரண்டு பயணிகளும், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

உயிரிழந்த இந்தியர்கள், உத்தரபிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் சோனு ஜெய்ஸ்வால், அனில் ராஜ்பர், அபிஷேக் குஷ்வாஹா மற்றும் விஷால் சர்மா என அடையாளம் காணப்பட்டனர்

இந்த நிலையில், விமானத்தின் உள்ளே இருந்த இந்திய பயணி ஒருவர் விபத்துக்கு சில நிமிடங்கள் முன்  பேஸ்புக் நேரலையில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிழம்புகள் எழுவது தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்