பாலமேடு ஜல்லிக்கட்டு – 15 காளைகளை அடக்கி மணி முதலிடம்..!
பாலமேடு ஜல்லிக்கட்டில் மணி என்பவர் 15 காளைங்களை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.
இதில், மணி என்பவர் 15 காளைங்களை அடக்கி முதலிடத்திலும், 11 காளைகளை அடக்கி ராஜா இரண்டாவது இடத்திலும், 9 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் மூன்றாவது பிடித்துள்ளனர்.