பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு..! முதல் 3 இடத்தை பிடித்தவர்கள் இவர்கள்தான்..!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு காளைகளை அடக்கி ராஜா என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், இந்த சுற்றில் வாடி வாசல் வழியாக 94 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தற்போது இந்த சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், இதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஏழு காளைகளை அடக்கி ராஜா என்பவர் முதலிடத்தையும், 6 காளைகளை அடக்கி அரவிந்த் என்பவர் இரண்டாம் இடத்திலும், மூன்று காளைகளை அடக்கி அஜித் குமார் என்பவர் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.