BREAKING NEWS:11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள்  தேர்ச்சி!

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்று  காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடியதேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment