சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவுக்கு 60,000 பேர் பலி.!
சீனாவில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரையில் கொரோனா பாதிப்புக்கபட்டு 60,000 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர்.
சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் சற்று தலைதூக்க தொடங்கியதும், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசிடம் வலியுறுத்தியது.
ஆனாலும் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, பலியானோர் எண்ணிக்கை சரிவர தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சீன மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரையில் மட்டுமே கொரோனாவால் பாதிப்புக்கபட்டு 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக சீன மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், இதில் 90 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், 5,503 பேருக்கு நுரையீல் பாதிப்பு இருந்ததால் தான் உயிரிழந்தனர் எனவும் சீன மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ளது.