டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு.!
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது குறித்து மணீஷ் சிசோடியா, இன்று மீண்டும் சிபிஐ எனது அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் வரவேற்கப்படுகிறார்.
எனது வீட்டை சோதனையிட்டனர், எனது அலுவலகத்தை சோதனையிட்டனர், எனது லாக்கரை சோதனையிட்டனர், எனது கிராமத்தை கூட சோதனை செய்தனர். எனக்கு எதிராக எதுவும் அவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, நான் எந்த தவறும் செய்யாததால் எதுவும் கண்டுபிடிக்கப்படாது. டெல்லியின் குழந்தைகளின் கல்விக்காக நான் உண்மையாக உழைத்தேன், என அவர் தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.