எஸ்பிஐ வங்கி கிளார்க் தேர்வை பொங்கல் விடுமுறையில் நடத்தக்கூடாது.! ஜெயக்குமார் பேட்டி.!
எஸ்பிஐ வங்கி கிளார்க் தேர்வு பொங்கல் விடுமுறையில் நடத்த கூடாது என்றே அதிமுக நினைக்கிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.
பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் காலிபணியிடங்களுக்கான தேர்வானது வரும் திங்கள் ஜனவரி 15 மாட்டு பொங்கல் விடுமுறை தினத்தன்று நடைபெற உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இடது சாரி கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழ்நாடு மக்கள் அனைவரும் கொண்டாடும் பொங்கல் பண்டிகை விடுமுறையில் வங்கி தேர்வுகளை நடத்த கூடாது. என்றே அதிமுக நினைக்கிறது.’ என தெரிவித்தார்.