கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்.! மிரட்டலாக வெளியான “ரிவால்வர் ரீட்டா” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக வாஷி எனும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் மாமன்னன், தெலுங்கில் தசரா, போலா சங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதன்படி, படத்திற்கு “ரிவால்வர் ரீட்டா” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான தோற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். போஸ்டரை பார்க்கையில், படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.
Wishing some of my favourite people the very best ♥️@KeerthyOfficial @Jagadishbliss #RevolverRita Looking forward to this !! ????@dirchandru @dineshkrishnanb @Cinemainmygenes @Aiish_suresh @TheRoute @PassionStudios_ pic.twitter.com/1pqdOutCE8
— Samantha (@Samanthaprabhu2) January 14, 2023
இந்த “ரிவால்வர் ரீட்டா” திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான கே சந்திரா என்பவர் இயக்குகிறார். படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்துடன் இணைந்து ஜெகதீஷ் படத்தை தயாரிக்கிறார்.
படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக நடித்துள்ள தசரா திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.