மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு கொலை மிரட்டல்..!
நாக்பூரில் உள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. நாக்பூரின் கம்லா சாலையில் உள்ள கட்கரியின் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு மூன்று முறை தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அலுவலகத்திற்கு வந்த அழைப்பில் அந்த நபர் கூறியதாவது “கட்காரி நான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்
இந்த மிரட்டல் அழைப்பு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாக்பூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல் வந்ததையடுத்து அமைச்சர் கட்காரிக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.