சந்தோக் சிங் மறைவு! பாரத் ஜோதா யாத்திரை நிறுத்திவைப்பு.!
காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங், மறைவையடுத்து, பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின், தலைமையிலான பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரை இன்று பஞ்சாபில் தொடர்ந்து நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில், ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி, கலந்து கொண்டார்.
இந்த யாத்திரையின் போது சந்தோக் சிங், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி, பாரத் ஜோடோ யாத்திரையை இடைநிறுத்தியுள்ளது மற்றும் ஜலந்தரில் திட்டமிடப்பட்ட ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் கூறுகையில், இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் நினைக்கிறோம். இறுதிச் சடங்குகள் முடியும் வரை, அது நிறுத்தி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.