தனுஷ் ரசிகர்களே “வாத்தி” படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா..?
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வா வாத்தி பாடல் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று , பலருடைய பேவரைட் பாடலாக மாறியுள்ளது.
இதையும் படியுங்களேன்- தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர்கள்…விண்ணை பிளக்கும் ‘வாரிசு’ கொண்டாட்டம்.!
இதனை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாத்தி படத்தின் நாடோடி மன்னன் என தொடங்கும் அடுத்த பாடல் வரும் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.