காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங், மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!
ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று பஞ்சாப் லூதியானாவில் நடைபெற்ற ராகுல் காந்தியின், பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட, காங்கிரஸ் எம்.பி சந்தோக் கிங் சவுத்ரி, திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி , இரங்கல் தெரிவித்துள்ளார். மோடி தனது ட்வீட்டில், பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் என்றும் மக்களால் நினைவில் கொள்ளப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது இரங்கல் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.