குஜராத்தில் பட்டம் பறக்க விட்டு மகிழந்த மத்திய அமைச்சர் அமித்ஷா.!
குஜராத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பட்டம் விட்டு மகிழ்ந்தார்.
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 14ஆம் தேதி அந்தத்த மாநில விழா கொண்டாப்படுகிறது.
அப்படி குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறை தினத்தை கொண்டாட மத்திய அமைச்சர் அமித்ஷா தனது சொந்த மாநிலத்திற்கு வந்துள்ளார்.
மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத், வெஜல்பூரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது. அந்த பட்டம் விடும் திருவிழாவில் அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பட்டம் விட்டு மகிழ்ந்தார்.