ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவிலிருந்து பழங்கள் இறக்குமதிக்கு தடை!

கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பான அச்சம் காரணமாக  ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாம்பழம், பேரீட்சை, வாழைப் பழங்கள், காய்கறிகள் என எதையும் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக 14 பேர் உயிரிழந்த நிலையில், பழந்தின்னி வவ்வால்களால் இந்த வைரஸ் பரவுவதாக நம்பப்படுகிறது. மாநிலத்தில் பழங்களின் விற்பனை ஏற்கெனவே சரிந்த நிலையில் தற்போது ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment