ஆளுநருக்கு எதிராக முதல்வர் எழுதிய புகார் கடிதம்.! உள்துறைக்கு அனுப்பிய குடியரசு தலைவர்.!
ஆளுநர் நடவடிக்கை குறித்து முதல்வர் எழுதிய புகார் கடித்தை குடியரசு தலைவர் , மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக செயல்படுகிறார். அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக பிரதிநிதிகள் குடியரசு தலைவாரை சந்தித்து முதல்வர் எழுதிய அந்த கடிதத்தை கொடுத்தனர். இந்த கடிதத்தை தற்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.