சந்தோக் சிங் சவுத்ரி எம்.பி மறைவு – காங்கிரஸ் தலைவர் இரங்கல்
சந்தோக் சிங் சவுத்ரி எம்.பி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் இரங்கல் தெரிவித்து ட்வீட்.
இன்று காலை பஞ்சாப் லூதியானாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி சந்தோக் கிங் சவுத்ரி கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவரை உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘சந்தோக் சிங் சவுத்ரி எம்.பியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.