ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு..!
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி சந்தோக் கிங் சவுத்ரி உயிரிழப்பு.
இன்று காலை பஞ்சாப் லூதியானாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி சந்தோக் கிங் சவுத்ரி கலந்து கொண்டார்.
அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவரை உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.